உள்ளூர் செய்திகள்

கரும்பு தோட்டம் தீ பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.

16 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

Published On 2023-04-17 15:03 IST   |   Update On 2023-04-17 15:03:00 IST
  • மின் கம்பி உரசியதில் விபத்து
  • போலீசார் விசாரணை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா செளளூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 54). இவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 16 ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

இந்த நிலையில் கரும்பு வெட்டப்பட இருந்த நிலையில் நேற்று கரும்பு தோட்டத்தின் மீது சென்ற மின் கம்பி உரசியதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 16 ஏக்கர் அளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் மள மளவென தீ பரவி எரிந்தது. கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை அணைக்க அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் குடத்தில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத் துறையினர் தீ அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் கரும்புத் தோட்டம் எரிந்தது.

இது குறித்து தீயணைப்புத்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு தோட்டம் எரிந்து நாசமானதால் கரும்பு விவசாயி குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News