பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
- பைக்கில் வந்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புது ஓட்டல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். அரசு போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 40).இவர் மொபட்டில் நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
பக்கிரிதக்க அடுத்த ஏலகிரி ஏரிக்கோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அடையாளம் தெரியாத 2 பேர் மோட்டார் பைக்கில் வந்தனர். அவர்கள் திடீரென செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர். இதில் செல்வி நிலை தடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். செயினை பறித்த மர்மகும்பல் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து செல்வி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.