உள்ளூர் செய்திகள்

2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-12-14 15:42 IST   |   Update On 2022-12-14 15:42:00 IST
  • கள்ள சாராயம் விற்பனை செய்ததால் நடவடிக்கை
  • கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் சாம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 38) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரது மனைவி அம்சா (52) ஆகிய இருவரும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயலட்சுமி உட்பட 2 பேரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கள்ள சாராயம் விற்பனை செய்த பல்வேறு வழக்குகள் நிலுவை உள்ள ஜெயலட்சுமி மற்றும் அம்சா ஆகிய இருவரும் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags:    

Similar News