உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

Published On 2023-12-06 10:08 GMT   |   Update On 2023-12-06 10:08 GMT
  • வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதன அள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (21). கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவரும் சரண்யா (20) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி மாலை சந்தோஷ் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை..புகாரின் பேரில் பென்னா கரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பட்டதாரி பெண். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த சிறுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறுமியின் தாய் ஏரி வேலைக்கு சென்றவர் மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து தாய் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் பாப்பா ரப்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (53). இவரது மகள் தேவதர்ஷினி (23) . சசிகலா பாப்பாரப்பட்டி துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேவ தர்ஷினி எம். எஸ்.சி, பி.எட் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் தேவதர்ஷினி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை வலை வீசி தேடி வருகின்றனர்.

Similar News