உள்ளூர் செய்திகள்
தொப்பையாறு அணை உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்
- இரண்டு முறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
- நீர் வெளியேற்றுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொப்பூர்,
தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை தொடர் மழைப்பொழிவின் காரணமாக இந்த ஆண்டு அணையின் மொத்த உயரமான 50 அடியை எட்டி இரண்டு முறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த மாதம் இரண்டாவது முறையாக தொடர் மழைப்பொழிவால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் உபரி நீராக தொப்பையாற்றில் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொப்பையாறு அணை ஜனவரி மாதம் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.