உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

Published On 2023-06-01 07:17 GMT   |   Update On 2023-06-01 07:17 GMT
  • மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது.
  • ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- 

திருவெண்ணை நல்லூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது. இதில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி கணினி அறிவியல் கணிதம் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் இந்த பாடப்பிரிவலுக்கு கட்டணம் 2740 ஆகும்.

ஜூன் 6-ந் தேதி வணிகவியல் காலை 9.30 மணி அளவில் தொடங்கும் இதற்கு கட்டணம் ரூ.2,720 ஆகும். ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு கட்டணம் 2.720 ரூபாய் ஆகும். ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் இவற்றின் உண்மைச் சான்றிதழ் உடன் 2 பிரதிகள், ஜெராக்ஸ் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.

சேர்க்கைக்கான கட்ட ணத்தை அன்றே அலுவ லகத்தில் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்த வர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், www.gasctvn.com என்ற இக்கல்லூரியின் இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் குறுஞ் செய்தி மற்றும் புலனம் (வாட்ஸ் அப்) வழியாக தகவல் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய கல்லூரியை அணுகலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News