உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.

கிருபாசமுத்திர பெருமாள்கோவில் தேர் வெள்ளோட்டம்

Published On 2022-06-11 14:56 IST   |   Update On 2022-06-11 14:56:00 IST
  • நன்னிலம் அடுத்துள்ள சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோவிலில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
  • இதையடுத்து தேர் பழுதடைந்த நிலையில், நூறு ஆண்டுகளாக தேரோட்டம் நிகழவில்லை.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில், 11-வது வைணவத் திருத்தல மாக விளங்குகிறது.

ஸ்ரீரங்கத்திற்கு இணையான,பாலா அரங்கநாதன் ஆகஇருந்து, அருள்புரியும் திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த தலத்தில், 100 ஆண்டுகளுக்குதேரோ ட்டம் நடைபெற்று இருந்தது. இதையடுத்து தேர் பழுதடைந்த நிலையில், நூறு ஆண்டுகளாக தேரோட்டம் நிகழவில்லை. இந்நிலையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர் புதுப்பிக்கப்பட்டு, 32 அடி உயரத்திற்குஅமைக்க ப்பட்டுள்ளது.

புதுப்பி க்கப்பட்ட தேரின் வெள்ளோ ட்டம் நடைபெற்றதுதேரில் கிருபாசமுத்திர பெருமாள் எழுந்தருளி, முக்கியவீதி வழியாக சென்று,நிலை வந்தடைந்தது. தேரோட்ட த்திற்கு இந்து சமய அறநிலை யத் துறையும், கிராம மக்களும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News