உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சென்ற வாலிபர் விபத்தில் பலி

Published On 2022-12-07 08:33 GMT   |   Update On 2022-12-07 08:33 GMT
வாகனம் ஓட்டி சென்ற மோகன் ஹெல்மெட் போட்டிருந்ததால் சிறு காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம்:

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22). இவர் நேற்று மாலை திருவண்ணாமலையில் நடைபெற்ற தீபத்திரு விழாவுக்காக மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் நந்தகுமாருடன் திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் சென்றபோது எதிரே வந்த முதியவர் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்ட போது நிலை தடுமாறி தவறி விழுந்ததில் வாலிபர் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

மேலும் வாகனம் ஓட்டி சென்ற மோகன் ஹெல்மெட் போட்டிருந்ததால் சிறு காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News