உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரி விடுதியில் இருந்து மாணவி மாயம்
- 3-ம் ஆண்டு படித்து வருகிறார்
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த தாலிக்கால் கிராமத்தை சேர்ந்த விவசாயி உடைய 20 வயது மகள். செய்யாறு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரிக்கு சொந்தமான அரசு விடுதி ஒன்று அப்பகுதியில் உள்ளது. மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரி விடுதியில் இருந்து திடீரென மாயமானார். இதனால் கல்லூரி விடுதியில் இருந்த ஊழியர்கள் மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியை பல்வேறு இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். மாணவி கிடைக்காததால் பெற்றோர் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்தார். மேலும் மாயமான மாணவியை தேடி வருகிறார்.