உள்ளூர் செய்திகள்

செங்கம் நகரில் விளம்பர பேனர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-06-10 07:37 GMT   |   Update On 2023-06-10 07:37 GMT
  • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
  • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது

செங்கம்:

செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் போக்கு வரத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளம்பர பேனர்கள் மீது தடை விதித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி மெயின் ரோடு, போளூர் ரோடு, மில்லத் நகர், மேலப்பாளையம், தாலுகா ஆபிஸ், சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வணிக மற்றும் அரசியல் கட்சி விளம்பரங்கள் விளம்பர பேனர்கள் வைக்கப்ப ட்டுள்ளது.

இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் ஏற்படும் சூழலும். தமிழக அரசு விளம்பர பேனர்களுக்கு தடை விதித்துள்ளது.

பேனர்கள் வைத்து சில நாட்காளக பேனர்களை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படும். விளம்பர பேனர்களை கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே செங்கம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News