உள்ளூர் செய்திகள்

வருமுன் காப்போம் சிகிச்சை முகாம்

Published On 2023-08-24 09:09 GMT   |   Update On 2023-08-24 09:09 GMT
  • 1,017 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது
  • கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

வந்தவாசி:

வந்தவாசியை அருகே தென்வணக்கம்பாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு தென்வணக்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் சக்குபாய் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் வரவேற்றார்.

வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் முகாமை தொடக்கி வைத்தார். தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன்ஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் 1017 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் 5 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 5 பேருக்கு மக்களை தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

முகாமில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, தெள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பழனி அங்கன்வாடி மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருதியில் சுகாதார ஆய்வாளர் பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News