உள்ளூர் செய்திகள்

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்.

வந்தவாசியில் 9 கிராமங்களை நகராட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு

Published On 2023-06-10 07:16 GMT   |   Update On 2023-06-10 07:16 GMT
  • ஒன்றிய அலுவலகம் முற்றுகை
  • கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 9 கிராமங்களை நகராட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

வந்தவாசி அடுத்த சென்னாவரம் மும்முனி, பாதிரி, வெண்குன்றம், மாம்பட்டு, பிருதூர், கீழ்சாத்தமங்கலம், அம்மையப்பட்டு, செம்பூர் ஆகிய கிராமங்களை வந்தவாசி நகராட்சியில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வந்தவாசி நகராட்சியில் 9 கிராமங்களை சேர்த்தால் கிராம பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

9 கிராமங்களை வந்தவாசி நகராட்சியில் சேர்க்கக்கூடாது என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News