கால் பாதம் தரையில் படாமல் கிரிவலம் சென்ற பக்தர்கள்
- வேஷ்டியை தரையில் விரித்து போட்டு அதன் மீது நடந்து சென்றார்
- சாமி தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் தொடங்கினார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் அருணாசலா கோவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் வருவது வழக்கம்.
இதில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வித்தியாசமான முறையில் கிரிவலம சென்றார்.
திருவண்ணாமலை யில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளதாக முன்னோர்கள் தெரிவித்த நிலையில் இந்த ஆன்மீக பக்தர் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவல பாதையில் செல்ல தொடங்கினார்.
தன் பாதங்கள் தரையில் படாமல் இருக்க நீளமான வேஷ்டியை தரையில் விரித்து போட்டு அதன் மீது நடந்து கிரிவலம் சென்றார்.
அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் மகளும் இருந்தனர். மேலும் இந்த பக்தர்கள் துணியை பயன்படுத்தி நடந்து சென்றதை அந்த வழியாக சென்ற ஆன்மீக பக்தர்களும் மற்றும் பொதுமக்களும் வியப்புடன் பார்த்து சென்றனர்.