உள்ளூர் செய்திகள்

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஜீவசமாதிகளை சீரமைக்க வேண்டும்

Published On 2023-11-22 09:26 GMT   |   Update On 2023-11-22 09:26 GMT
  • காட்டு சிவா சித்தரின் பக்தர்கள் வலியுறுத்தல்
  • கலெக்டரிடம் மனு அளித்தனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணா மலையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் 'காட்டு சிவா' என்ற சித்தர் பல ஆண்டுகளுக்கு முன்பு தவம் செய்து வந்துள்ளார். அங்கு இவர் தவம் செய்த குகை உள்ளது.

சித்து விளையாட்டில் சிறந்து விளங்கி யவர் என கூறப்படுகிறது. இவர், முக்தி அடைந்த பிறகு, திருவண்ணா மலை அருகே உள்ள ஆணாய் பிறந்தான் கிராமத்தில் 'பிரம்மஸ்ரீ காட்டு சிவா ஆசிரமம்' செயல்படுகிறது.

இந்த ஆசிரமம் உள்ள இடத்தை, பக்தர் ஒருவர் தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆசிரமத்தில் காட்டு சிவா சித்தரின் வழித்தோன்றல்கள் என கூறப்படும் 13 பேரின் ஜீவசமாதிகள் உள்ளன. ஜீவசமாதியில் மாதந்தோறும், கிருத்திகை நட்சத்திரத்தில் காட்டு சிவா சித்தரின் பக்தர்கள் தியானம் செய்துவந்தனர். மேலும், உலக நன்மைக்காக பிரார்த்தனையும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு, 'பொக்லைன்' இயந்திரம் மூலம் ஜீவசமாதிகள் இடித்து சமப்படுத்தப்பட்டன.

மேலும், குடிநீர் பயன்பாட்டில் இருந்த மிகப் பெரிய கிணறு இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக வாகன ங்களை நிறுத்தி வைப்பத ற்காக, 13 பேரின் ஜீவசமா திகள் இடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு, ஆசிரம நிர்வாகிகள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரம்மஸ்ரீ காட்டு சிவா ஆசிரம நிர்வாகிகள், கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சுவாமி சிவானந்த பரமஹம்சர் வழிவந்த பிரம்மஸ்ரீ காட்டு சிவா ஆசிரமத்தில், அவர் வழிவந்த 13 பேரின் ஜீவசமாதிகள் மற்றும் கிணறு ஆகியவற்றை 'பொக் லைன்' எந்திரம் மூலம் இடிக்கப் பட்டுள்ளன. நாங்கள் காலம், காலமாக வழிபாடு செய்து வந்த ஜீவசமாதிகளை திடீரென இரவோடு, இரவாக இடித் துள்ளனர்.

இதனால், எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட மரங்களையும் வெட்டி அகற்றி உள்ளனர். இந்த செயலை செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஜீவசமாதிகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மூடப்பட்ட கிணற்றையும் தூர்வாரி கொடுக்க வேண்டும்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News