உள்ளூர் செய்திகள்

குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம்

Published On 2023-06-18 14:05 IST   |   Update On 2023-06-18 14:05:00 IST
  • ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது
  • ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்

ஆரணி:

மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆகாரம், தேவிகாபுரம் தச்சூர், ஓண்ணுபுரம, அப்பநல்லூர், அத்திமலைபட்டு, குன்னத்துர் மலையம்பட்டு ஆகிய 27 ஊராட்சிகளுக்கு ஸ்வச் பாரத் மிஷன் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் 42 பேட்டரி வாகனங்கள் குப்பை சேகரிக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் பங்கேற்றார். மேலும் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சாவியை வழங்கி பணியினை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை சேர்மன் வேலாயுதம், ஓன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு, கீதா மோகன், கீதாசரவணன், ஏழுமலை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, மோகன், ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News