உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் ரத்தசோகை பாதித்த குழந்தைக்கு பாம்பே குரூப் அரிய வகை ரத்தம்

Published On 2023-06-30 15:13 IST   |   Update On 2023-06-30 15:13:00 IST
  • ரத்த வங்கி அலுவலர்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் முயற்சித்தோம்
  • பெங்களூருவில் இருந்து ெரயில் மூலம் கொண்டு வந்தனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிரா மத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தைக்கு தீவிர ரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாம்பே குரூப் ரத்தம்

குழந்தையை பரி சோதித்த டாக்டர்கள், ஹீமோ குளோபின் அளவு குறைவாக இருந்தது கண்டு அதிர்ச் சியடைந்தனர். சராசரி அளவை விட மிகவும் குறைவாக இருப்பது குழந் தையின் உயிருக்கு ஆபத்து என்பதால், உடனடியாக ரத்தம் ஏற்ற முடிவு செய் தனர். ஆனால், அந்த குழந்தையின் ரத்தப் பிரிவு அரிய வகையான

'பாம்பே குரூப் ரத்தம்' என தெரியவந்தது. லட்சத்தில் ஒருவருக்கு மட் டுமே இந்த வகை ரத்தம் அமைந்திருக்கும் என்பதால், ரத்த வங்கியில் கையிருப்பில் இல்லை. எனவே, பல இடங்களில் முயற்சித்தனர்.

அதைத் தொடர்ந்து, தன்னாவலர் அமைப்பு மூலம் பெங்களூருவில் இருந்து பாம்பே குரூப் ரத்தம் உடனடியாக, எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுகையில், 'பாம்பே குரூப் ரத்தம் மிகவும் அரிதானது.

எனவே, குழந்தையின் உயிரை காப்பாற்ற, ரத்த வங்கி அலுவலர்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் முயற்சித்தோம். தன்னார்வ குழுவின் உதவியால் பெங்களூருவில் ரத்தம் கிடைத்தது.

அதனை உரிய நேரத்தில் கொண்டுவந்து செலுத் தியதால், குழந்தையின் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்'

இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த துறைத்தலைவர் பெருமாள் பிள்ளை மற்றும் டாக்டர்கள் உதயதீபா, ராஜசேகர் ரத்த மைய துறைத் தலை வர் டாக்டர் ஜெயலட் சுமி, உதவி பேராசிரியர் பவித்ரா ஆகியோரை கல்லூரி முதல்வர் அரவிந்த் பாராட்டினார்.

Tags:    

Similar News