உள்ளூர் செய்திகள்

பாலம் அமைக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டிய காட்சி.

செய்யாற்றின் குறுக்கே ரூ.55.88 கோடியில் 3 உயர்மட்ட பாலம்

Published On 2023-11-23 07:36 GMT   |   Update On 2023-11-23 07:36 GMT
  • அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
  • 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்

வேங்கிக்கால்:

கலசபாக்கம் ஒன்றியத்தில் செய்யாற்றின் குறுக்கே பூண்டி பழங்கோவில், கீழ்பெத்தாரை பூவாம்பட்டு, கீழ் தாமரைப்பாக்கம், தென் மகா தேவமங்கலம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.55 கோடியே 88 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று பூண்டி ஊராட் சியில் நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்ட கலெக்டர் முரு கேஷ் தலைமை தாங்கினார். கலசபாக்கம் எம்.எல்.ஏ., பெ.சு.தி. சரவணன் முன்னிலை வகித்து பேசினார். கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் வரவேற்றார். முதன்மை பொறியாளர் முருகேஷ் திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, 3 உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- கலசபாக்கம் தொகுதியில் தற்போது இந்த 3 உயர் மட்ட மேம்பாலங்களும் தொடர்ந்து என்னிடம் இத்தொகுதி எம். எல்.ஏ. சரவணன் வைத்த கோரிக்கையின் பேரில் கட்டப்படுகின்றன.

இந்த 3 மேம்பாலங்கள் கட்டப்படுவதால் 27-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு சுமார் 15 கிலோமீட்டர் பயண தூரம் குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தொழிலாளர் நல மேம்பாட்டு பிரிவு அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்திவேல்மாறன், சப்- கலெக்டர் தனலட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அன்பரசி ராஜசேகரன், சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் ரமணன், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒப்பந்ததா ரர்கள் துரை வெங்கட், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News