உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டி- காரைக்குடிக்கு 120கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில்

Published On 2023-10-18 09:35 GMT   |   Update On 2023-10-18 10:17 GMT
  • மின் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும்.
  • முன்னோட்ட நடவடிக்கையாக அதிவேக பரிசோதனை ரெயில் இயக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி- காரைக்குடி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று காலை நடந்தது.

இந்த ரெயிலானது திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டு க்கோட்டை, அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு சோதனை ஓட்டமாக 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்க ப்பட்டது.

இந்த அதிவேக ரெயில் சோதனை ஓ.எம்.எஸ் என்ற கருவி மூலம் அளக்க ப்பட்டு எங்கெல்லாம் அதிர்வு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து தடம் சீரமைக்கப்பட்டு பயணிகள் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

இதன்படி மின் மயமாக்கு வதற்கு தேவையான நடவடி க்கைகளை ரெயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும்.

இதன் முன்னோட்ட நடவடி க்கையாக அதிவேக பரிசோ தனை ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயிலுக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் உபயோ கிப்பாளர் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர், ஒருங்கிணைப்பாளர் துரை ராயப்பன், அரசு வக்கீல் பாஸ்கர், செயலாளர் எடையூர் மணிமாறன், உதவி கோட்ட பொறியாளர், கோட்ட பொறியாளர் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News