உள்ளூர் செய்திகள்

திருடப்பட்ட மணல் மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

திருமலைராஜன் ஆற்றங்கரையில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்

Published On 2022-09-21 08:03 GMT   |   Update On 2022-09-21 08:03 GMT
  • மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
  • மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து திருடி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம்-தென்பிடாகை இடையே திருமலைராஜன் ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது.

பின்னர் அந்த மணலை அந்த பகுதியில் கொட்டி வைத்து இரவில் வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது போல் மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

மேலும் சுமார் 25 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு மணலை திருடி கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தும் திருடி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இருப்பினும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் சிலர் ஆற்றங்கரைகளில் பள்ளம் தோண்டி மணலை திருடி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து ஆற்றில் தோண்டி மணலை திருடிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News