உள்ளூர் செய்திகள்

பரிமள ரெங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது.

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்

Published On 2023-04-18 07:33 GMT   |   Update On 2023-04-18 07:33 GMT
  • மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • 3 முறை குளத்தை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை திருஇந்த ளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும்.

இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் சிகர விழாவான தெப்போற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமள ரெங்கநாதர் பெருமாள், கோயில் திருக்குளத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்க ப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்ப ட்டது.

தொடர்ந்து, மூன்று முறை குளத்தைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடை ந்தது. இதில், கோயில் செயல் அலுவலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஸ்வரன், நகர மன்ற துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News