உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே சாலையில் குளம் போல தேங்கி நிற்கும் சாக்கடை நீரினை படத்தில் காணலாம்.

மரக்காணம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

Published On 2023-05-23 07:50 GMT   |   Update On 2023-05-23 07:50 GMT
  • ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
  • அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News