வால்பாறையில் விஷத்தை குடித்த பெண் டாக்டர் பலி
- ஜாஸ்மின் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
- ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்துள்ளனர்.
வால்பாறை
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் 3-வது டிவிசனை சேர்ந்தவர் மதுஅருமராஜ்குமார் (வயது68).
இவர் அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் துணை மேலாளராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஜாஸ்மின்(வயது67). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவருக்கு அங்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாஸ்மின் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த வீட்டினை காலி செய்ய முடிவு செய்தார்.
அதன்படி சம்பவத்தன்று தனது கணவருடன் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியானர். உடனடியாக மனைவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதா க தெரிவித்தார். இதை கேட்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்து ள்ளனர். அது விஷம் என தெரியாமல் அவர் குடித்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.