பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
- ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). சார்பில் கருங் கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 2-வது தெருவில் நேற்று மாலை 4.25 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
- ஊர்வலத்தின் முன்பும், பின்பும், சாலையின் 2 ஓரமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.
ேசலம்:
சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து சேலம் ஜில்லா ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்). சார்பில் கருங் கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 2-வது தெருவில் நேற்று மாலை 4.25 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
கிருஷ்ணம்மாள் நகர், கருங்கல் பட்டி பிரதான சாலை, பிரபாத், எம்.ஜி.ஆர். வளைவு, திருச்சி பிரதான சாலை வழியே வந்த ஊர்வலம் தாதகாப்பட்டி கேட் மைதானத்தில் 5 மணிக்கு நிறைவடைந்தது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே சீருடையில் அணிவகுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் முன்பும், பின்பும், சாலையின் 2 ஓரமும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க ஊர்வல பாதையில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.