உள்ளூர் செய்திகள்

இடி தாக்கியதில் மேற்கூரையில் ஓட்டை விழுந்துள்ளதை படத்தில் காணலாம்.

இடி தாக்கி, வீட்டின் மேற்கூரை சேதம்

Published On 2023-05-25 15:01 IST   |   Update On 2023-05-25 15:01:00 IST
  • இடி தாக்கியதில், சோலார் உருளைகள் வெடித்து சிதறியது தெரியவந்தது.
  • அவரைகுடும்பத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர்.

ஓசூர்,

ஓசூர் அருகே பழைய மத்திகிரி பகுதியில் உள்ள பொதிகை நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் யேசுபாண்டியன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சூர்யா, சினேகா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஓசூர் பகுதியில் சூறாவளி காற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது, மத்திகிரி பகுதியில் பயங்கர சத்தம் காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டதில், யேசுபாண்டியன் வீட்டின் மேல் தளத்தில் உள்ள உருளை சோலார் வாட்டர் ஹீட்டரில் இடி தாக்கியது தெரியவந்தது.

இடி தாக்கியதில், சோலார் உருளைகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. மேலும், வீட்டின் மேல் தளத்தில் ஓட்டை விழுந்து முதல் மாடியில் தனது அறையில் இருந்த பட்டதாரி சினேகா (22) மீது சிமெண்ட் கல் விழுந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக, அவரைகுடும்பத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தினர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News