உள்ளூர் செய்திகள்

அலகுமலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்க முடிவு

Published On 2023-02-21 07:54 GMT   |   Update On 2023-02-21 07:54 GMT
  • வீடுகளின் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
  • அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இன்றி அகற்றப்படும்

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அலகுமலையில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இதன் சுற்று பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் சாக்கடை கட்டுவதற்காக இடத்தை அளந்து தருமாறு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வருவாய் துறையினருக்கு மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வருவாய் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவீடு செய்தனர். இதில் பல்வேறு வீடுகளின் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

இது குறித்து குடியிருப்பு வாசிகளுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும் தாங்களாகவே அந்த ஆக்கிரப்புகளை எடுக்காவிட்டால் மீண்டும் 6 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் சாக்கடையை கட்டுவதற்கு இடைஞ்சலாக ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டால் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இன்றி அகற்றப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News