உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
திண்டுக்கல்லில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
- திண்டுக்கல் கே.பாறைப்பட்டியில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் பைக் சேதமானது
- பெட்ரோல் குண்டு வீசியர்வகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கே.பாறைப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர் பா.ஜனதா நகரத்தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான குடோனில் பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர்(29), முகமதுஇலியாஸ்(29), ஹபிப்ரகுமான்(27), முகமதுரபீக்(29) ஆகியோர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் ஒரு கார் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின்பேரில் சிக்கந்தர், முகமதுஇலியாஸ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.