உள்ளூர் செய்திகள்

மகன் கண் முன்னே தாய் பலி

Published On 2023-01-22 14:50 IST   |   Update On 2023-01-22 14:50:00 IST
  • இரவு தனது சொந்த ஊரான பனமரத்துப்பட்டிக்கு திரும்பி கொண்டிருநத்தார்.
  • செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துவிட்டார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் பகுதி ஆஞ்சநேயர் கோயில் அருகில் சேலம் மாவட்டம் ஜோதி என்பவர் தனது மகன் விக்னேசுடன் மாரண்டஹள்ளி அங்காளம்மன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு தனது சொந்த ஊரான பனமரத்துப்பட்டிக்கு திரும்பி கொண்டிருநத்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து விக்னேஷின் தாயார் ஜோதி நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது பின்னே செங்கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துவிட்டார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர் சக்திவேல், ஓட்டுநர் அதியமான் ஆகியோர் காயமடைந்த விக்னேசுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இறந்த ஜோதி என்பவரின் சடலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது மகன் கண் முன்னே தாய் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News