உள்ளூர் செய்திகள்
வழித்தட பிரச்சினையில் கூலித்தொழிலாளிக்கு அடி உதை
- 2 பேரும் சேர்ந்து முனியப்பாவை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கினர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாது, மாதேஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம தேன்கனிக்கோட்டை கட்சுவாடி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பா (வயது32). கூலித்தொழிலாளி.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மாது (22), மாதேஸ் (26) ஆகிய 2பேருக்கும், முனியப்பாவுக்கும் வழித்தடம் காரணமாக தகராறு ஏற்பட்டு அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேரும் சேர்ந்து முனியப்பாவை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கினர். இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தேனகனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முனியப்பா தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாது, மாதேஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.