மூதாட்டியின் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் நகையை பறித்து சென்ற 2 பேர்- போலீசார் விசாரணை
- பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விஜயா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அருகே வெண்ணாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி விஜயா (வயது62). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-சென்னை பைபாஸ் சாலையில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக வந்து விஜயா கையில் வைத்திருந்த பையை பறித்து சென்றனர். அப்போது அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர்கள் பையில் இருந்த நகையை மட்டும் எடுத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து விஜயா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.