உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கிய கணவன் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2022-12-05 13:08 IST   |   Update On 2022-12-05 13:08:00 IST
  • செல்வம் இவருடைய மனைவி சின்னபொண்ணு (வயது 50). இவர் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
  • தனது கணவர் மற்றும் மகனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிராமம், குலுமிகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சின்னபொண்ணு (வயது 50). இவர் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர், தனது கணவர் மற்றும் மகனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கணவன் செல்வம், மகன் ராஜா, மருமகள் கோகிலா ஆகியோர் சின்னபொண்ணுவை அடித்து உதைத்ததாக தெரிகிறது.இதுபற்றி சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News