- விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு
- மீன்சுருட்டி அருகே பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி இறந்து போனது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவருடைய மனைவி கார்குழலி இவர்களுக்கு ஜெனிஷாஸ்ரீ(வயது 7) ஒரு பெண் குழந்தை ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.மணிகண்டன் என்பவர் லாரி டிரைவர் என்றும் அவர் தேனி மாவட்டம் அருகில் லாரி ஒட்டிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் மணிகண்டன் மனைவிக்கு தற்போது குழந்தை பிறந்து உள்ளது.கார்குழலியின் அக்கா செவ்வந்தி குழந்தை பிறந்ததை பார்க்க சென்றதாக தெரிகிறது.கார்குழலி தனது மகள் ஜெனிஷாஸ்ரீயை, மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் உள்ள வன்னியர் தெருவை சேர்ந்த தனது தாயார் லெட்சுமி வீட்டில் விடுமாறு கூறியுள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் பாட்டி வீட்டில் விளையாடி கொண்டு இருந்த சிறுமி சிறிது நேரத்தில் காணாமல் போனார்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.பின்னர் ஜெனிஷாஸ்ரீ விளையாடி கொண்டு இருந்த இடத்தில் கால் தடத்தை வைத்து பின் தொடர்ந்து சென்று பார்த்த போது அருகில் உள்ள குளத்தில் இறங்கியது தெரிவித்ததையடுத்து, குளத்தில் இறங்கி தண்ணீரில் சிறுமி மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுவரைக்கு தகவல் இருந்தா மீன்சுட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.