உள்ளூர் செய்திகள்

பரண் அமைத்து பி.எம்.2 காட்டு யானையை கண்காணிக்கும் வனத்துறையினர்

Published On 2022-12-08 15:01 IST   |   Update On 2022-12-08 15:01:00 IST
  • வாச்சிக்கொல்லி, புளியம்பாறை பகுதியில் பி.எம்.2 காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மரங்கள் மீது பரண் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
  • 2 வாரங்களுக்கும் மேலாக தேவாலா, புளியம்பாரை, பாடந்தொரை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டு யானையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி,

கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவரை கடந்த மாதம் 20-ந் தேதி பி.எம்.-2 என அழைக்கப்படும் காட்டு யானை தாக்கி கொன்றது. இதை தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக 4 கும்கி யானைகளை முதுமலையில் இருந்து வனத்துறையினர் அழைத்து வந்தனர். தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக தேவாலா, புளியம்பாரை, பாடந்தொரை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டு யானையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து உள்ளது. இதனால் கால்நடை மருத்துவக் குழுவினர், வன ஊழியர்கள் ரோந்து சென்று டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

ஆனால், காட்டு யானையின் இருப்பிடத்தை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. Also Read - நடப்பு ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை பரண் அமைத்து கண்காணிப்பு இந்தநிலையில் நேற்று வாச்சிக்கொல்லி, நீடில் ராக், தேவர்சோலை எஸ்டேட், வுட்பிரையர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News