உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் கூவத்தில் இறங்கிய வாலிபர்

Published On 2023-11-28 10:56 GMT   |   Update On 2023-11-28 10:56 GMT
  • ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியில் மயிலை ரயில் நிலையம் எதிரே உள்ள கூவம் ஆற்றில் ஒருவர் மது போதையில் இறங்கி தரையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்.

இதுபற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, கள்ளகுறிச்சி மாவட்டம் கொக்கரபாளையம் நாவலூரை சேர்ந்த அமோஷ் என்பது தெரியவந்தது. சென்னையில் மந்தைவெளி ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் இது போன்று நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து பின்பு அந்த நபரை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News