உள்ளூர் செய்திகள்

பட்டுப்போன தென்னை மரம்.

சாலை ஓரத்தில் உள்ள பட்டுப்போன தென்னை மரத்தை அகற்ற வேண்டும்

Published On 2023-08-20 09:31 GMT   |   Update On 2023-08-20 09:31 GMT
  • சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் உள்ளது.
  • பட்டுப்போன மட்டைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்து எரிய வாய்ப்பு உள்ளது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே காலகம் -ஆவுடையார் கோயில் சாலையில் நாடாகாடு முனி கோயில் பாலம் அருகில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் உள்ளது.

அவற்றில் ஒரு தென்னை மரம் முற்றிலும் பட்டுப்போன நிலையில் மட்டைகள் காய்ந்து அவ்வப்போது சாலையில் விழுந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்விடத்தை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

முற்றிலும் பட்டுப்போன தென்னை மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பட்டுப்போன தென்னை மரத்தின் அருகில் மின்சார கம்பிகள் செல்கின்றன. இதனால் பட்டுப்போன மட்டைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்து எரிய வாய்ப்பு உள்ளது. உயிர் சேதங்கள் ஏற்படும் முன்பாக பட்டுப்போன தென்னை மரத்தை அப்புறப்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறியதாவது, இந்த காலகம் - ஆவுடையார் கோயில் சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தென்னை மரங்கள் அதிகம் உள்ளது. இவற்றை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.  

Tags:    

Similar News