உள்ளூர் செய்திகள்

மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு

Published On 2023-03-09 09:36 GMT   |   Update On 2023-03-09 09:36 GMT
  • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

சேலம்:

மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

சேலத்தில்...

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

Tags:    

Similar News