உள்ளூர் செய்திகள்

மரக்காணம் பஸ் நிலையம் அருகில் பழுதாகிய சி.சி.டி.வி. கேமரா காட்சி பொருளாக நிற்பதை படத்தில் காணலாம்.

மரக்காணத்தில் பழுதாகிய சி.சி.டி.வி. கேமராக்கள் சரி செய்யப்படுமா?

Published On 2023-06-11 09:30 GMT   |   Update On 2023-06-11 09:30 GMT
  • சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.
  • போலீசார் துப்பு துலக்க முடியாமல் தினறி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் சில வருடங்களுக்கு முன்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனை போலீசார் கண்காணிக்க, மரக்காணம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப் பட்டது. இவ்வாறு பல லட்சம் செலவில் மரக்காணம் சன்னதி தெரு, பள்ளிக்கூட தெரு, புதுவை ரோடு, மேட்டுத் தெரு, சக்திநகர், சால் ரோடு, பஸ் நிலையம் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டது.

இந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பெரும்பா லானவை, அதாவது 90 சத வீதத்திற்கு மேல் பணி செய்ய வில்லை. இதனை சீர்செய்ய போலீசாரும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் முக்கிய இடங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கொலை, கொள்ளை போன்றவைகள் நடக்கும் போது, அங்குள்ள மக்களிடம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த போலீசார் வலியுறுத்துகின்றனர். ஆனால், அரசால் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களின் பழுதுகளை நீக்கி சரி செய்ய போலீசாருக்கு மனம் வரவில்லை.

எனவே, மரக்காணம் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News