உள்ளூர் செய்திகள்
கட்டிட மேஸ்திரி தூக்கு போட்டு தற்கொலை
- அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்
- விரக்தியடைந்த மகாராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குமுதேபள்ளி பகுதியைச் சேர்நதவர் மகாராஜா (வயது 44). கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி உள்ளார். மகாராஜாவுக்கு குடிபழக்கம் இருந்த வந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதேபோன்று நேற்றும் அவர் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் விரக்தியடைந்த மகாராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.