உள்ளூர் செய்திகள்

சுடுகாடு ஆக்கிரமிப்பால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் தவிப்பு

Published On 2023-08-16 09:53 GMT   |   Update On 2023-08-16 09:53 GMT
  • உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என காசி உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  • மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு நிலம் மீட்கப்படும் என அதி–காரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

பாப்பிரெட்டிப்பட்டி,ஆக.16-

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.துறிஞ்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் காசி (வயது65). இவர் உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். இவரது உடலுக்கு உறவினர்கள் பல்வேறு சடங்குகளை செய்து முடித்த பின்பு உடலை அடக்கம் செய்ய பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

சுடுகாட்டிற்கு அருகே வசித்து வரும் மக்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய கூடாது என கூறினர்.

2.45 ஏக்கர் இடம் கொண்ட சுடுகாட்டை அருகில் உள்ள சில நில உரிமையாளர்கள் 2.30 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்பை மீட்டு உடல்கள் அடக்கம் செய்யப்படாத இடத்தில் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என காசி உறவினர்களிடம் கூறி உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பொம்மிடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி மற்றும் வருவாய் துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலை யில் இறந்த காசியின் உடல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அடக்கம் செய்ய முடியாமல் தவித்த னர்.

அப்பகுதி மக்களிடையே மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுடுகாட்டு நிலம் மீட்கப்படும் என அதி–காரிகள் தெரிவித்ததை அடுத்து இறந்த காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News