ஆஸ்கர் படத்தில் நடித்த பாகன் தம்பதியை பாராட்டிய சட்டசபை பொதுக்கணக்குக்குழு
- பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- அங்கு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளும் வழங்கினர்.
ஊட்டி,
தமிழக சட்டசபை பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குழுவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈஸ்வரன், கிருஷ்ணசாமி, சரஸ்வதி, சேகர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
முதல்கட்டமாக நீலகிரி மாவட்டம், மசினக்குடி ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஷ்யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 78 வீடுகளை பார்வையிட்டனர். அதன்பிறகு சட்டசபை பொதுக்கணக்குக்குழு, பைக்காராவுக்கு சென்றது. அங்கு புனல் மின்உற்பத்தி நிலையத்தில், மின்சாரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்ற சட்டப்பேரவை பொதுக்கணக்குக்குழு, அங்கு ஆஸ்கர் விருதுபெற்ற குறும்படத்தில் நடித்த யானைப்பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினர். பின்னர் அங்கு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவுகளும் வழங்கினர்.
அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண், சட்டசபை பொதுக்கணக்குக் குழு இணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், தமிழக மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, கூடலூர் நகரசபை தலைவர் பரிமளா, வருவாய் கோாட்டாட்சியளர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா (கூடலூர்), தமிழக மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலாஜி, உதவி இயக்குநர்கள் சாம் சாந்தகுமார் (ஊராட்சிகள்), இப்ராகிம்ஷா (பேரூராட்சி கள்), கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தாசில்தார்கள் ராஜசேகர் (ஊட்டி), சித்தராஜ் (கூட லூர்), வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அண்ணா துரை, ஆறுமுகம், மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மோகன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.