உள்ளூர் செய்திகள்

காமராஜர் சிலை அமைப்புக் குழுவிடம், சிலை பராமரிப்பிற்கு அளிக்கப்பட்ட தொகை ஒப்படைக்கப்பட்ட காட்சி.

ஆலங்குளத்தில் காமராஜர் சிலை பராமரிப்பிற்கு அளிக்கப்பட்ட தொகை சிலை அமைப்பு குழுவிடம் ஒப்படைப்பு

Published On 2023-01-07 09:11 GMT   |   Update On 2023-01-07 09:11 GMT
  • ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது.
  • சிலையை பராமரித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் பெயரில் அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வரவு வைக்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தாலும், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீண்டகாலமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணியால் பாதிக்கப்படும் கட்டட உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க ப்பட்டுவந்த நிலையில், காமராஜர் சிலையும் அகற்றப்பட வேண்டிய நிலையில் இருந்ததால், சிலையை பராமரித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அருமைநாயகம் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு, சிலையை பராமரிப்பு பணி செய்து வந்ததற்காக அரசு சார்பில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526 வரவு வைக்கப்பட்டது.

இதற்கிடையே, தனிநபர் பெயரில் தொகை வரவு வைக்கப்பட்டது, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மற்றும் புதிய சிலை அமைப்புக் குழு இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கலந்து கொண்டு, சிலையை பராமரிப்பு செய்து வந்ததற்காக வழங்கப்பட்ட அந்தத் தொகையை, புதிதாக சிலை அமைப்பதற்காக, சிலை அமைப்புக் குழுவிடம் வழங்க தான் உரிய ஏற்பாடு செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வில்லியம் தாமஸ் ஆகியோர் முன்னிலையில் அருமைநாயகம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 526-க்கான தனது வங்கி காசோலையை, சிலை அமைப்புக் குழுவைச் சேர்ந்த ஜாண்ரவி, பர்வீன்.அலெக்ஸ் ராஜா, உள்ளி ட்டோரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் அருணாசலம், காங்கிரஸ் நிர்வாகி அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News