உள்ளூர் செய்திகள்

தங்காடிகுப்பம் ஊராட்சியில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

Published On 2022-09-11 15:09 IST   |   Update On 2022-09-11 15:09:00 IST
  • சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
  • முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் தங்காடிகுப்பம் கிராமத்தில் நடந்த பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொலைபேசி எண், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்ட பொறியாளர் சரவணன், விற்பனையாளர்கள் சரவணன், வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News