உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் பைரவர்.
தாடிக்கொம்பு: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
- தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- 16 வகையான அபிஷேக ங்கள், சிறப்பு பூஜை கள்மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகாசன பைரவருக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ங்கள், சிறப்பு பூஜை கள்மற்றும் ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள் வாசு, கேப்டன் பிரபாகரன்,
சுசீலா ராமானுஜம், கோவில் செயல் அலுவலர் முருகன், பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் செய்து இருந்தனர். பைரவர் பூஜைக்கு வந்த பக்தர்களுக்கு அறங்காவலர் குழுவினர்கள் மற்றும்கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.