உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஆண்டிபட்டி பள்ளியில் தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் பயிற்சி

Published On 2023-10-09 13:06 IST   |   Update On 2023-10-09 13:06:00 IST
  • நவீன தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் செய்முறை பயிற்சிக்கான கூட்டு முயற்சி தொடக்க விழா நடைபெற்றது.
  • பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் கிட் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் நவீன தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் செய்முறை பயிற்சிக்கான கூட்டு முயற்சி தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார். பள்ளியின் செயலர் மாத்யூ ஜோயல் வாழ்த்தி பேசினார்.

மேலும் விழாவில் எடோவேட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவி ஸ்ரீ மற்றும் எமில் ராஜ் ஸ்டான்லி ஆகியோர் பேசினர். பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் கிட் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News