உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் பட்டா கத்தியுடன் வாலிபர் கைது

Published On 2022-12-29 12:09 IST   |   Update On 2022-12-29 12:09:00 IST
  • வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வளசரவாக்கம் ராதாகிருஷ்ணன் சாலையில் நள்ளிரவு 1மணி அளவில் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கினர். ஆனால் போலீசை கண்டதும் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். இதில் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட வாலிபர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த மகி என்கிற மகேஷ் (23) என்பது தெரிந்தது. மேலும் அவனது பையை சோதனை செய்ததில் பட்டா கத்தி ஒன்று இருந்தது. மகேஷ் தனது உறவினருடன் மதுரவாயல் பகுதிக்கு கஞ்சா வாங்க வந்ததாக கூறினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News