உள்ளூர் செய்திகள்
- அப்புன் இவர் நண்பர்களுடன் மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.
- பெரியகாவனத்தை சேர்ந்த நண்பரான ஜெயக்குமாரை கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளத்தில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அப்புன் இவர் நண்பர்களுடன் மதுகுடித்த போது தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலில் அப்புனுவுக்கு வெட்டு விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகாவனத்தை சேர்ந்த நண்பரான ஜெயக்குமாரை கைது செய்தனர்.