உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட சவுதி ரியால் ரூபாய் நோட்டுக்களை படத்தில் காணலாம்.


சென்னை விமானநிலையத்தில் ரூ.34 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்- வாலிபரிடம் விசாரணை

Published On 2022-07-04 07:18 GMT   |   Update On 2022-07-04 07:18 GMT
  • சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
  • சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

ஆலந்தூர்:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளையும் அவர்கள் உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய சூட்கேசை சோதனை செய்த போது அதில் ஏராளமான காகித கவர்கள் இருந்தன.

அந்த கவா்களை பிரித்து பார்த்த போது. ஒவ்வொரு கவர்களுக்குள்ளும் ஒரு 500 சவுதி ரியால் கரண்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.மொத்தம் 339 கவா்களில் 339 சவுதி ரியால் கரண்சிகள் இருந்தன.

அந்த சவுதி ரியால் கரண்சிகளின் மொத்த மதிப்பு ரூ.34.23 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள், சவுதி ரியால் கரண்சிகளை பறிமுதல் செய்தனா். மேலும் பயணியின், சாா்ஜா விமான பயணத்தையும் ரத்து செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News