உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலையில் வாலிபர் கைது

Published On 2022-10-26 12:17 IST   |   Update On 2022-10-26 12:17:00 IST
  • ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்.
  • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கொல்லபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(வயது 75 ). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் எல்லம்மாள் வீட்டில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த ஒரு கம்மல் மட்டும் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து பென்னாலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தினர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த ஜீவா என்ற வாலிபர் எல்லாம்மாளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஜீவாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது நள்ளிரவில் எல்லாம்மாளின் வீட்டில் நுழைந்து பீரோவை திறந்து கொள்ளையில் ஈடுபட்டபோது அவர் பார்த்துவிட்டு தடுத்தார். எனவே இதை வெளியே யாரிடமாவது சொல்லி விடுவார் என்ற பயத்தில் எல்லாம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் அவர் அணிந்து இருந்த ஒரு கம்மலை மட்டும் கழற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த கொலையில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News