கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று பரிதாபமாக இறந்தார்.
- மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் உளுந்தை காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி திலகவதி (34) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திலகவதி அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த 7 -ந் தேதியன்று குமார் தனது மனைவி திலகவதியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு அவர் வேலை செய்யும் இடத்தில் விடுவதற்காக சென்றார்.
உளுந்தை சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கிய போது பின்னால் அமர்ந்திருந்த திலகவதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (49). இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியன்று அவர் மோட்டார் சைக்கிளில் திருத்தணி சென்றுவிட்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் ஜங்ஷன் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த சாலமனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாலமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.