உள்ளூர் செய்திகள்

சிங்கம்புணரி பாலாற்றில் காட்டாற்று வெள்ளம்

Published On 2022-08-27 12:55 IST   |   Update On 2022-08-27 12:55:00 IST
  • சிங்கம்புணரி பகுதியில் மட்டும் சுமார் 58 மில்லி மீட்டர் மழை பெய்தது.
  • இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த சிறுவர்கள் உள்பட 8 பேர்.

சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் ஓடிவரும் காட்டாற்று பாலாறாகும். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கரந்தைமலை பகுதியில் இருந்து உற்பத்தியாகி வரும் இந்த காற்றாற்று வெள்ளம் பருவமழை காலத்தில் மட்டுமே இந்த பாலாற்று படுகையில் நீர் வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று வெப்பச்சலனம் காரணமாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் சிங்கம்புணரி பகுதியில் மட்டும் சுமார் 58 மில்லி மீட்டர் மழை பெய்தது.

நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக சிங்கம்புணரி பாலாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக ஆற்றின் இரு கரைகளைத் தொட்டு வெள்ள நீர் பாய்ந்து வந்தது.

அதிகாலை 3 மணியிலிருந்து வரத்துவங்க தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில் பாலாற்று படுகை முழுவதும் புதர் போல் மண்டியிருக்கும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக நீர் கடைமடை பகுதிகளை சென்று அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கருவேல மரங்கள் அதிகம் உள்ள காரணத்தினால் இனி பருவமழை காலத்தில் இந்த பாலாற்றில் ஏற்படும் தண்ணீர் வருகையால் இந்தப் பகுதி கரையோரங்களில் வாழும் வேங்கைபட்டி, அணைக்கரைபட்டி, பாரதி நகர் காளாப்பூர் முறையூர் பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

Similar News