உள்ளூர் செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கார் திருட்டு
- சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நவநீத கோபாலகிருஷ்ணன்.
- தனது கார் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வண்டலூர்:
சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நவநீத கோபாலகிருஷ்ணன் (வயது 35), இவர் குடும்பத்தினருடன் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு காரில் வந்தார். காரை வண்டலூர் உயிரியல் பூங்கா வாகனம் நிறுத்துமிடத்தில் டோக்கன் வாங்கிய பிறகு நிறுத்திவிட்டு பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்திற்கு மீண்டும் வந்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கார் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நவநீத கோபாலகிருஷ்ணன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.